ரயில் கண்ணாடியில் மோதிய கழுகு... லோகோ பைலட் காயம்.. வைரலாகும் வீடியோ!

 
லோகோ

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓடிக் கொண்டிருந்த ரயிலின் முன்பக்க கண்ணாடியை கழுகு ஒன்று வேகமாக மோதியதில் கண்ணாடி நொறுங்கி, கழுகு டிரைவர் அறைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் லோகோ பைலட் முகத்தில் காயம் ஏற்பட்டது. 

பராமுல்லா–பனிஹால் ரயில் பாதையில் பீஜ்பேரா மற்றும் அனந்த்நாக் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்தச் சம்பவம் நடந்தது. ரயில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, கழுகு திடீரென முன்பக்க கண்ணாடியைப் பலத்த வேகத்தில் மோதியது. தாக்குதலின் வேகத்தால் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கழுகு உள்ளே விழுந்தது.

சோஷியல் மீடியாவில் பரவி வரும் வீடியோவில், கண்ணாடி துண்டுகளால் தரை முழுவதும் சிதறி கிடக்கின்ற நிலையில், காயமடைந்த லோகோ பைலட் வலியைத் தாங்கிக்கொண்டு கட்டுப்பாட்டு அறையுடன் வயர்லெஸ் மூலம் அமைதியாக பேசும் காட்சிகள் காணப்படுகின்றன.

அனந்த்நாக் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு பைலட் உடனடியாக முதலுதவி சிகிச்சை பெற்றார். ரயில் சேவைகள் சில நேரம் தடை செய்யப்பட்டு, பாதுகாப்பு ஆய்வு முடிந்த பின் மீண்டும் இயக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள், ரயில் பயணங்களில் இத்தகைய பறவை மோதல் சம்பவங்கள் அரிதாகவே நடைபெறுகின்றன என்றாலும், பறவைகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மேலதிக ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

எக்ஸ்பிரஸ் ரயில்

இதற்கு ஒத்த சம்பவமாக, கடந்த மாதம் விஜயவாடா விமான நிலையத்தில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கழுகு மோதியதால் பெங்களூரு பயணம் ரத்தானது குறிப்பிடத்தக்கது. ரயில் மற்றும் விமானப் பாதைகளில் பறவைகள் மோதும் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், வனவிலங்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்கள் கருத்து.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!