தேவாலயங்களில் விடிய விடிய பிரார்த்தனை.. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்!
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியுள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன் தினமான இன்று மாலை முதல் தேவாலயங்களில் பிரார்த்தனைகளும், பாடல்களும் நடைபெறும். விடிய விடிய தேவாலயங்களில் கூட்டு திருபலியும், பிரார்த்தனைகளும் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு கருதியும், கொண்டாட்டங்களின் போது வரம்பு மீறாமல் இருப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு முதல் நாளை வரை சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
