இன்று அதிகாலை மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தேரோட்டம் துவங்கியது! குலுங்கியது திருச்சி மாநகர்!
இன்று காலை திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் தாயுமானசுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடைப்பெறுகிறது. ஒவ்வொரு வருடமும் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் நிகழும் சித்திரைத் திருவிழாவிற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். குழந்தைப்பேறு, சுகப்பிரசவம் போன்ற வேண்டுதல்களுக்கான தலம் என்பதால், இந்தியா முழுவதும் இருந்தும் பிரார்த்தனைகளோடு பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வணங்கி, ஆசி பெற்று செல்வது வழக்கம்.
சித்திரை மாதம் தேர்த்திரு விழா வருடாவருடம் தொடர்ந்து 10 நாட்கள் நடைப்பெறும். இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த மாதம் 29ம் தேதி செட்டிப்பெண் மருத்துவ வைபவம், 30ம் தேதி திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மே 3ம் தேதி காலை நடைபெற உள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் உற்சவமூர்த்திகள் மலையிலிருந்து புறப்பட்டு கீழ ஆண்டார் வீதியில் உள்ள தேர் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கிருந்து மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளியபின் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில், உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் திருத்தேர் வடம் பிடிக்கப்படும்.

தேரோடும் நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்படும். முன்னெச் சரிக்கையாக தேரோடும் நேரத்தில் அப்பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக உதவி ஆணையர் ஹரி ஹரசுப்பிரமணியன் தலைமையில், கோயில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!
