7.2 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்... இந்தோனேஷியாவில் தொடரும் சோகம்... !!

 
Breaking!! இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!

இந்தோனேஷியாவில் பண்டா கடற்பரப்பில்  அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது  7.2 ரிக்டர் அலகுகளாக பதிவாகி இருந்தது. ஆனால் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. 2004ல்  இந்தோனேசியாவில் கடலுக்கு அடியே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.  அந்த சமயத்தில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடலுக்குள் ஏற்பட்ட மிகப் பெரும் நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 9.3 ஆa பதிவானது .

 

இந்தோனேஷியா

இதனால் அதிபயங்கரமான சுனாமி பேரலைகள் உருவாகின.  இந்தோனேசியா தொடங்கி இந்தியா வரை தெற்காசிய நாடுகளில் பெரும் பேரழிவு ஏற்பட்டது.   பல்லாயிரக்கணக்கானோர் நிலைமையே  என்ன என தெரிவதற்கு பல மாதங்கள் ஆகின. இதனல்   இந்தோனேசியா நிலநடுக்கம் என்றாலே  தெற்காசியா முழுவதும்  பெரும் பதற்றத்தை உருவாக்குகிறது. இந்தோனேசியா தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்  அடுத்தடுத்து ஏற்பட்டு வருகிறது.

நிலநடுக்கம்

 

சில நாட்களுக்கு முன் இந்தோனேசியாவின் மலுகு மாகாணம் டூயல் கடற்கரை நகரில் ரிக்டரில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியில்  7.0 ரிக்டரில்   மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 3வதாக ரிக்டரில் 5.1 அலகு ரிக்டரும் பதிவானது.  இந்நிலையில் இன்று  7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் தெற்காசியா முழுவதும் பெரும் பதற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவெனஉடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web