அதிர்ச்சி... இன்று காலை கேரளாவில் ரிக்டர் 3.0 அளவில் நிலநடுக்கம்... அலறிய பொதுமக்கள்!
கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியாவின் வட மாநிலங்களிலும் அதனை ஒட்டி உள்ள பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கங்கள் உருவாகி வருகிறது. இருப்பினும் தென்னிந்தியாவில் இது போன்ற நிலநடுக்கங்கள் மிக அரிதாகவே உணரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இன்று காலை 8:15 மணியளவில் பல்வேறு இடங்களில நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
EQ of M: 3.0, On: 15/06/2024 08:15:26 IST, Lat: 10.55 N, Long: 76.05 E, Depth: 7 Km, Location: Thrissur, Kerala.
— National Center for Seismology (@NCS_Earthquake) June 15, 2024
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/r9a0IRoq4w
நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் ஜன்னல்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.0 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும் நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர்.
நிலநடுக்கம் சுமார் 4 நொடிகளுக்கும் மேல் உணரப்பட்டதாகவும், அப்போது சிறு நிறுவனங்களில் இருந்த இயந்திரங்கள் லேசான பழுது ஏற்பட்டதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
