பசிபிக் பெருங்கடலில் 80 தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை... பீதியில் மக்கள்!

 
நிலநடுக்கம்


 
பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அமைந்துள்ள வானூட்டு  தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

Breaking!! இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!


போர்ட் விலா பகுதியில் இருந்து மேற்கு திசையில் 30 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 43 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதனை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்திற்கு  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

சுனாமி
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு , நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  இந்த தீவில் மொத்த மக்கள் தொகை  சுமார் 330,000 பேர். இங்குள்ள 80  தீவுகளுக்கும்  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள காரணத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.  இதனைத் தொடர்ந்து  மணிப்பூர் சுராசந்த்பூர் என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வின் திறன் ரிக்டரில் 3.7ஆக பதிவாகியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!