ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்!

 
நிலநடுக்கம்


 
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 31 ம் தேதி ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீண்டும் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இது குறித்து  தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் “ ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் காணப்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காபூலுக்கு அருகே 160 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிர்ப்பலிகள் ஏதும் புதிதாக ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வியாழக்கிழமை காலை ஆப்கானிஸ்தானில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
உலக உணவுத் திட்டம் சார்பில் ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குனார் மற்றும் நாங்கர்ஹார் மாகாணங்களுக்கு தேவையான அவசர உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  கிழக்கு ஆப்கானிஸ்தானில்  ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா் மற்றும் 3,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  
உலக உணவுத் திட்ட அவசர உதவிகளை மேற்கோள் காட்டி, நிலநடுக்கம், திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மோசமான வானிலை காரணமாக மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாமல் அச்சுறுத்தல் நிலவி வருவதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் "அதிகமான வீடுகள் பலத்த சேதமடைந்து இருப்பதாகவும், சாலைகள் அழிக்கப்பட்டன. மேலும் பல உயிர்கள் பறிபோயின. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற விமானம் அந்நாட்டின் தலைநகா் காபூலை சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில் தெரிவித்துள்ளார்.  காபூல் விமான நிலையத்தைச் சென்றடைந்த நிவாரணப் பொருள்களின் படங்களையும் அவா் பதிவிட்டுள்ளார்.  

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
'போா்வைகள், கூடாரங்கள், சுகாதாரப் பொருள்கள், அத்தியாவசிய மருந்துகள், ஜெனரேட்டா்கள், சமையல் பாத்திரங்கள், குடிநீா் சுத்திகரிப்பு சாதனங்கள், அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், மருத்துவ உபகரணங்கள் உட்பட  21 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் களநிலவரத்தை இந்தியா தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இனிவரும் நாள்களில் மேலும் மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படும்' எனவும் அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?