ஜப்பானில் 5.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... அச்சத்தில் மக்கள்!

ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்தில் அகுசேகி - ஜிமா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 19 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
Check out this earthquake swarm off the coast of Japan 😲 there's been a 4.3M and a 5.4M earthquake so far today as lower Japan braces for a possible major quake or volcano eruption 🌋 pic.twitter.com/bvu3Lrl0TC
— TheÐogeGlory (@GloryDoge) July 6, 2025
இருப்பினும், நிலநடுக்கத்திற்குப் பின்னர் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீவில் வசிக்கும் 23 பேரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தீவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக டோஷிமா கிராம அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டோஷிமா கிராமத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், ஜப்பான் நேரப்படி நேற்று காலை அகுசேகி-ஜிமா தீவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டோகாரா தீவுகளுக்கு அருகில் கடந்த மாதத்திலிருந்து நில அதிர்வுகள் அதிகமாக இருப்பதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!