செம... மசால் தோசை, பூரி, வெரைட்டி ரைஸ் எல்லாமே ரூ20 தான்... ரயில் நிலையங்களில் ”எகானமி மீல்ஸ்”!

 
எகானமி மீல்ஸ்

 கோடைவிடுமுறை தொடங்கிவிட்டது. விடுமுறையை கொண்டாட குடும்பம் , உறவினர், நண்பர்களுடன் சுற்றுலா செல்லத் தயாராகி வருகின்றனர். நீண்ட நெடுந்தூர பயணங்களுக்கு நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் ரயில்களையே நம்பியுள்ளனர். பொதுவாக வெயில் காலத்தில் ரயிலில் அதிகமான பயணிகள் பயணம் செய்வதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.  குறிப்பாக முன்பதிவு செய்யாத பெட்டிகளில் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

எகானமி மீல்ஸ்

இத்திட்டத்தை  இந்தியன் ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் படி 200 கிராம் எடைக் கொண்ட தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை மற்றும் கிச்சடி இவைகளில் ஏதாவது ஒன்று  எகானமி மீல்ஸ் என்ற பெயரில் ரூ20க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. அதே போல் 325 கிராம் எடையுடைய  பூரி மசாலா மற்றும் பஜ்ஜி  “ஜனதா கானா” என்ற பெயரில் ரூ20 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

ரயில் உணவு பயணிகள்

அதேபோல் 350 கி எடையுள்ள மசால் தோசை போன்ற  தென்னிந்திய உணவு வகைகள்  “ஸ்னாக் மீல்ஸ்” என்ற பெயரில் ரூ50க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல்  200 மி.லி. தண்ணீர் பாட்டில்  ரூ3 க்கு விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் இந்த உணவுகளை வாங்கிக் கொள்ளலாம். இவை ரயில்களில்  முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளுக்கு அருகில் நடைமேடைகளில் இந்த உணவுகளுக்கான    இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web