பெண்களே உஷார்... உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா... லைவ் வீடியோவில் ரசித்த கொடூரம்!

 
கேமரா
 

சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் நாடு முழுவதுமே அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா வைத்து, லைவ் வீடியோவில் பார்த்து ரசித்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்து அதிர வைத்துள்ளது.உத்திரபிரதேசம் மாநிலம் காசியபாத் மாவட்டத்தில், கங்காநகர் பகுதியில் புகழ் பெற்ற கோவில் ஒன்று உள்ளது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இந்த கோவிலின் அருகே உள்ள ஆற்றில் புனித நீராடிய பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் மேற்கொள்வர். பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு அருகிலேயே பெண்கள் -ஆண்கள் உடை மாற்றும் அறை தனித்தனியே இருக்கிறது.

கேமரா
இந்நிலையில், பெண்கள் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது அதிர்ச்சியளித்தது. இது குறித்து பெண் பக்தர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.போலீசாரின் விசாரணையில், மகத் முகேஷ் என்பவரின் செல்போனில் இந்த சிசிடிவி கேமிராவின் நேரலைக்கான செயலி இருந்தது கண்டறியப்பட்டது.

மகத் முகேஷை வளைத்துப் பிடித்த போலீசார், அவரின் செல்போனை ஆய்வு செய்ததில், கோவிலுக்கு வந்த பல பெண்கள் உடை மாற்றும் வீடியோக்கள் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்தது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. காவல் துறையினர் மகத் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!