எடப்பாடி பிரச்சாரம்.. விஜய் சுற்றுப்பயணம்... இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

 
ஸ்டாலின்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்க உள்ள நிலையில், நடிகர் விஜய்யும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், சதமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் இன்று ஜூன் 28ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - சார்பு அணிச் செயலாளர்கள் தொகுதி கூட்டம் இன்று மாலை 6 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

 ஸ்டாலின்
மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - சார்பு அணிச் செயலாளர்கள் - தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் வரும் ஜூலை 7ம் தேதி முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது