கோட்டை விட்ட எடப்பாடி... காலியாகும் அதிமுக கூடாரம்?! ஒரே மாசத்துல அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமான 3 முக்கிய தலைகள்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாத காலங்களே உள்ள நிலையில், ஆளுக்கட்சி மீது அதிருப்தி நிலவி வருகிறது என்று பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி. ஆனால் தேர்தல் பிரச்சார பயணத்திற்கு இந்த ஆளுங்கட்சி அதிருப்தி அலை மட்டுமே கைகொடுக்கும் என்று நம்பி இந்த முறையும் தேர்தலில் கோட்டை விட்டுவிடுவாரோ என்று அதிமுகவினரே பதற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
பிரதான எதிர்கட்சியான அதிமுக, கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியின் போது பல விஷயங்களைக் கோட்டை விட்டது. சென்னை பெருவெள்ளத்தின் போது திமுகவின் முக்கிய தலைவர்களைப் போலவே எடப்பாடி உட்பட அதிமுகவின் முக்கிய தலைவர்களும் வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடவில்லை. பேருக்கு கூட பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. வெள்ளம் முழுவதுமாக வடிந்த பின்னர் வெளியில் வந்து, எங்கெங்கு இன்னும் வெள்ளம் வடியவில்லை என்று பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் எடப்பாடி. அதைப் போலவே பரந்தூரில் விஜய் மாஸ் காட்டி ரோடு ஷோ நடத்தி ஆதரவு தெரிவித்தது துவங்கி, சென்னை துப்புரவு பணியாளர்களை சந்தித்தது வரையில் பல சம்பவங்களில் அடுத்தடுத்து சீமானும், விஜய்யும் செய்ததில் பாதியைக் கூட எடப்பாடி செய்யவில்லை என்று புலம்புகிறார்கள் அதிமுக தொண்டர்கள்.

இந்நிலையில் கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மூன்று முக்கிய தலைவர்கள் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தது குறித்து எந்த தகவலுமே தெரியாமல் அவர்கள் இணைந்ததும் அதிமுகவில் இருந்து நீக்கி அறிக்கை விடும் அளவுக்கு தான் எடப்பாடி இருக்கிறார் என்பதும் தொண்டர்களை அதிருபதிக்குள்ளாக்கி இருக்கிறது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்காமலே இருக்கிறார் என்கிறார்கள்.
புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான், அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா என அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமான நிலையில் இதே இன்று அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான மைத்ரேயன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இன்னு 2 பெண் தலைவர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் திமுகவில் இணைவார்கள் என்கிறார்கள்.

செந்தில் பாலாஜி, சேகர்பாபு உட்பட அதிமுக கூடாரத்தில் இருந்து திமுகவுக்கு போன பலர் முக்கிய பதவிகளில் வலம் வருகிறார்கள். ஆட்சியில் இல்லாத இந்த 4 வருட காலத்திலேயே அதிமுக கலகலத்துப் போயிருக்கிறது. கட்சியைக் கட்டுக்கோப்பாக கொண்டு செல்வதில் எடப்பாடிக்கு கில்லாடித்தனம் போதவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இத்தனை வீக்காக தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவின் கோட்டை சரிந்துக் கொண்டிருக்கையில், பாஜக கூட்டணியில் தேமுதிகவையும் கண்டுக் கொள்ளாமல் இன்னமும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார். இத்தனை எதிர்த்தும் பாஜகவுடனான கூட்டணிக்கு கட்சிக்குள் இன்னமும் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
