நீதிமன்றத்தில் ஆஜரானார் எடப்பாடி பழனிச்சாமி... வழக்கு விசாரணை ஜுன் 27-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

 
இபிஎஸ்

கடந்த ஏப்ரல் 15ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகிதத்தை பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி பேசியிருந்தார்.
இதனையடுத்து தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவதூறு பரப்பியதாக எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கடந்த ஏப்ரல் 18 ம் தேதி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இபிஎஸ்
இந்த நிலையில், 13-வது நீதித்துறை நடுவர் சக்திவேல் முன்னிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, "தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆஜரானார். இந்த வழக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஒருவர் தன்னை தவறாக, அவதூறாக பேசிவிட்டார் என்பதற்காக தொடரப்பட்ட வழக்கு. அதற்காக நீதிமன்றத்தில் ஆஜராவது முறை தான். அந்த வகையில் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட்ட ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கும் போது எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்போம்" என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web