இன்று எடப்பாடி பழனிச்சாமி 70வது பிறந்தநாள்... தங்கத்தேர், சிதறுதேங்காய்... அன்னதானம்...சிறப்பு வழிபாடு.. தொண்டர்கள் உற்சாகம்!
May 12, 2024, 07:17 IST
இன்று முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி நேற்று புதுச்சேரியில் அதிமுக தொண்டர்கள் விமரிசையாக கொண்டாடினார்கள். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தும், 108 தேங்காய் உடைத்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரி முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் இபிஎஸ் நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அத்துடன் கோவிலில்தங்கதேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
இதனை அடுத்து 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்த அதிமுகவினர் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்த நிகழ்வில் அதிமுகவை சேர்ந்த மாநில நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web