“பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை – திமுக ஆட்சி தோல்வி!” ... எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு!

 
எடப்பாடி
 

திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பாக இல்லை என்று அதிமுக கடும் குற்றச்சாட்டு சாட்டியுள்ளது. கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கொடுமையானதாகவும், பொதுமக்கள் நடமாடும் இடத்தில் இப்படிப்பட்ட செயல் நடப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த திமுக அரசுக்கு திராணி இல்லாதது தெளிவாகிறது என்றும், காவல்துறை மீதான பயம் இன்றி குற்றங்கள் நடப்பதால், “தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா?” என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.

இபிஎஸ் எடப்பாடி ஸ்டாலின்

டிஜிபி நியமன விவகாரத்தில் திமுக அரசு உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. நிரந்தர டிஜிபி நியமிக்காமல் அரசும், காவல்துறையும் செயலிழந்த நிலையிலேயே இருப்பதாகவும், இதன் பின்னணி ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதேவேளை, எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் அவசியம் என்றும், இதனை திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பது போலி வாக்காளர்களை பாதுகாக்கத்தான் என அதிமுக வாதிட்டுள்ளது.

இபிஎஸ் ஸ்டாலின்

அதிமுக தலைவர்கள் கூறியதாவது, “எஸ்.ஐ.ஆர். மூலம் உயிரிழந்தவர்களின் பெயர்கள் உள்ளிட்ட போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். இதை தடுக்க திமுக திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புகிறது. நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது உண்மையே,” என தெரிவித்துள்ளனர். மேலும், “என் குடும்பத்தினர் ஆட்சியிலோ கட்சியிலோ இல்லை. குடும்ப அரசியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எங்கள் கூட்டணிக்கு தலைமை அதிமுகதான்; அதிமுக ஆட்சியையே மக்கள் மீண்டும் விரும்புகிறார்கள்,” என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!