10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் கல்வி விருது!

 
விஜய் வெற்றிக் கழகம்

 தமிழகத்தில் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இது குறித்து நடிகரும், தவெக தலைவருமான  விஜய் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சந்திப்போம் நண்பர்களே எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில்  நடைபெற்ற 12ம் மற்றும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

நடிகர் விஜய்

அனைவரும் இனி  உயர் கல்வி இலக்குகளுடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வளம் வர இதயபூர்வமாக வாழ்த்துகிறேன் என தெரிவித்து விரைவில் நாம் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

விஜய்
அந்த வகையில் கடந்த ஆண்டில் ஜூன் 17ம் தேதி 10 மற்றும் 12 ம்  வகுப்புகளில் 234 தொகுதிகளிலும் முதல்  3 மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை அழைத்து கல்வி விருது விழா நடத்தினார். அதில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி அனைவரையும்  பாராட்டினார் விஜய்.  இந்த ஆண்டில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியரை நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். இது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web