இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது... புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
புதுச்சேரி மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு இடையே உள்ள பெட்ரோல், டீசல் விலை வேறுபாட்டை குறைக்கவும், புதுச்சேரி மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசலுக்கு திருத்தப்பட்ட வரி விகிதங்களை அறிவித்துள்ளது.
இந்த புதிய வரி விகிதங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி புதுச்சேரியில் பெட்ரோலுக்கான வாட் வரி 14.55 சதவீதத்திலிருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்கால் பகுதியில் 14.55 சதவீதத்திலிருந்து 16.99 சதவீதமாகவும், மாஹே பகுதியில் 13.32 சதவீதத்திலிருந்து 15.79 சதவீதமாகவும், ஏனாமில் 15.26 சதவீதத்திலிருந்து 17.69 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி புதுச்சேரியில் 8.65 சதவீதத்திலிருந்து 11.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. காரைக்காலில் 8.65 சதவீதத்திலிருந்து 11.23 சதவீதமாகவும், மாஹேவில் 6.91 சதவீதத்திலிருந்து 9.52 சதவீதமாகவும், ஏனாமில் 8.91 சதவீதத்திலிருந்து 11.48 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாஹேவில் ரூ. 91.92 மற்றும் ஏனாமில் ரூ.94.92 ஆக உள்ளது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ. 84.31, மாஹேவில் ரூ. 81.90 மற்றும் ஏனாமில் ரூ.84.75 இருந்து வருகிறது. தற்போது வாட் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.26, காரைக்காலில் 96.03, மாஹேவில் 93.92, ஏனாமில் 96.92 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் டீசல் லிட்டருக்கு ரூ. 86.48, காரைக்காலில் ரூ.84. 31, மாஹேவில் ரூ. 81.90, ஏனாமில் ரூ. 84. 75 உயர்த்தப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களை காட்டிலும் புதுச்சேரியில் விலை குறைவகவே இருக்கும். அரசின் வுருவாயைப் பெருக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலூரை விட புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.54, நாகப்பட்டினத்தைவிட காரைக்காலில் ரூ.6.22, கண்ணூரைவிட மாஹேவில் ரூ.13.86, காக்கநாடாவைவிட ஏனாமில் ரூ.15.16 விலை குறைவாக இருக்கும். டீசல் கடலூரைவிட புதுச்சேரியில் ரூ.7.91, நாகப்பட்டினத்தைவிட காரைக்காலில் ரூ. 7.54, கண்ணூரைவிட மாஹேவில் ரூ.10. 88, காக்கநாடாவைவிட ஏனாமில் ரூ.11.09 விலை குறைவாக இருக்கும் குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!