இன்று முதல் அமலுக்கு வந்தது... இனி உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

 
சிம் கார்டு

 இந்தியாவில் தொழில் நுப்ட வளர்ச்சி அசுர வேகம் அடைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஜியோ, ஏர்டெல்,  வோடபோன் ஐடியா  , பிஎஸ்என்எல்  என  அனைத்து டெலிகாம்  நிறுவனங்களுக்கும் முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.  குறிப்பாக இதுவரை   டெலிகாம் கஸ்டமர்கள் பெற்று வந்த முக்கிய சேவை நிறுத்தப்பட இருக்கிறது.  சிம் கார்டு பயன்படுத்தும் அனைத்து கஸ்டமர்களுக்கும், இந்த விதிகள் பொருந்தும்.  புதிய நிதியாண்டில்  வருமான வரி முதல் கிரெடிட் கார்டு வரையில் ஏப்ரல் 1ம் தேதியே புதிய விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இப்போது, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கான விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.
சிம் கார்டுகள்
அதன்படி இதுவரையில் வழங்கப்பட்டு வந்த யுஎஸ்எஸ்டி அடிப்படையிலான அழைப்பு பகிர்தல்   சேவையை நிறுத்த மத்திய தொலை தொடர்பு நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த சேவையை மாற்று வழியில் கஸ்டமர்களுக்கு வழங்கவும் டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.
சிம் கார்டில் எவ்வளவு பேலன்ஸ்,  டேட்டா இருக்கிறது, மொபைலின் ஐஎம்இஐ நம்பர் இவைகளை தெரிந்து கொள்ளலாம்.   உங்களது நம்பருக்கு வரும் கால்களை மற்றொருவருக்கு ஃபார்வேர்டு செய்து கொள்ளலாம் .   பல்வேறு சேவைகளுக்கு இந்த யுஎஸ்எஸ்டி கோட்கள் பயன்படுகின்றன. என்னதான் மொபைல் ஆப் மூலமே பேலன்ஸ், டேட்டாவை தெரிந்து கொண்டாலும் இன்டர்நெட்டை பெரும்பாலும் பயன்படுத்தாத சிம் கார்டு கஸ்டமர்கள் இந்த சேவையே மட்டுமே நம்பியுள்ளனர்.  
இதுபோன்ற கஸ்டமர்களை கால் பார்வேர்டிங் கோட்கள் மூலம் எளிதாக ஏமாற்றி விடலாம்.  போனை சில நிமிடங்கள் வேறொருவர் வைத்திருந்தால்  கால் பார்வேர்டிங் யுஎஸ்எஸ்டி கோடை பயன்படுத்தி உங்களுக்கு வரும் கால்களை அவர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

சிம் கார்டு


இதன் மூலம் உங்களுக்கு வரும் கால்கள் மட்டுமல்லாமல் எஸ்எம்எஸ்களையும் பயன்படுத்தி டிஜிட்டல் பணப்பறிப்பிலும் அவர்களால் ஈடுபட முடியும். இதனாலேயே இந்த சேவையை தொலை தொடர்பு துறை நிறுத்த முடிவு செய்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.இதன்படி இன்று  ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் நிறுவனங்களில் இந்த சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
யுஎஸ்எஸ்டி கால் பார்வேடிங் சேவை மூலம் பல்வேறு டிஜிட்டல் பணப்பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

திடீர் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!

From around the web