நாளை முதல் அமலுக்கு வருகிறது... 55 வருடங்களில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்!

 
முட்டை முட்டை

தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.95 இலிருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய விலை நாளை நவம்பர் 17ம் தேதி காலை முதல் அமலுக்கு வருகிறது.

முட்டை விலை திடீர் உயர்வு

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 25 காசு உயர்வு ஏற்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கும் நேரத்தில் முட்டைக்கு தேவை அதிகரிப்பது வழக்கம். அதேசமயம் கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரித்தல் போன்ற காரணங்களும் இந்த உயர்வுக்கு பின்னணியாக உள்ளதாக பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முட்டை விலை உயர்வு! கல்லா கட்டும் தீபாவளி விற்பனை!

தமிழகத்தின் முட்டை உற்பத்தி மையமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் 40 சதவீதம் கேரள மாநிலத்திற்கும், மேலும் தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் மாநிலத்தின் பிற சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

பண்ணை விலையே ரூ.6 என்ற உயரத்தை அடைந்துள்ளதால், சில்லறை சந்தைகளிலும் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர். குளிர்காலம் மேலும் தீவிரமானால், விலை மீண்டும் உயரக்கூடும் என பண்ணைத் தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!