பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ... நீக்க சொல்லி ட்விட்டருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு !

 
தேர்தல் ஆணையம்
கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலத்தில் எஞ்சிய 14 தொகுதிகளும் நேற்று வாக்குப்பதிவை சந்தித்தது. இத்தேர்தலை முன்னிட்டு கடந்த 4ம் தேதி கர்நாடகா பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 17 விநாடிகள் ஓடும் ஒரு அனிமேஷன் வீடியோவை பதிவேற்றியது.

தேர்தல் ஆணையம்
அதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டு சலுகைகளை காங்கிரஸ் பறித்து, அவற்றை முஸ்லிம்களுக்கு வழங்குவது போன்ற கருத்தை உள்ளடக்கியது. பாஜகவும் சமீபத்திய வாரங்களில் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்த வீடியோ தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் இதன் உண்மைத்தன்மையை ஆராய, பெங்களூரு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது கடந்த 5ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

தேர்தல் ஆணையம்
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த வீடியோவை நீக்கம் செய்ய ட்விட்டர் தளத்துக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.கர்நாடகாவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இந்த உத்தரவு வெளியிடப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web