இதனால் வாக்குசதவீதம் குறைகிறது... தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை!
மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று காலை 6ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில் தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவுடையும் போதும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு வரும் வாக்குப்பதிவு சதவீதம் பற்றி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. அந்த மனுவில் ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து 48 மணிநேரத்திற்குள் வாக்குப்பதிவு சதவீதத்தை துல்லியமாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். ஒவ்வொரு வாக்குசாவடியிலும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது எனும் 17c படிவத்தை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தேர்தல் ஆணையம் இந்த மனு குறித்து தவறான குற்றசாட்டுகள் தேர்தல் சமயத்தில் கூறப்படுவதால் மக்கள் வாக்களிப்பை இந்த புகார்கள் குறைத்துவிடும். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் இம்மாதிரியான வழக்குகள் காரணமாக தான் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கை விசாரிக்கும் கோடைகால சிறப்பு உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, தற்போது மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. இதற்கு மறுப்பு தெரிவித்து கோடை விடுமுறை முடிந்து, இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
