எல்லாக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துகிறது... தேர்தல் ஆணையர் விளக்கம்!

 
தேர்தல் ஆணையர்
 


2024ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்குத் தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாகவும் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை  எழுப்பியுள்ளது. அதே போல் பீகார் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியிலும் முறைகேடுகள் நடைபெறுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக கிளப்பியுள்ளார்.  

தேர்தல் ஆணையம்

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்   "வாக்காளர் பட்டியல் சீராய்வு தேவை என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகிறது. எல்லாக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் உருவாகின்றன. 

தேர்தல் ஆணையம்

எப்படி அரசியல் கட்சிகளிடையே தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்ட முடியும்? பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்பை அவமதிக்கின்றன. அனைத்து மாவட்ட அளவிலும் அனைவரும் இணைந்து செயல்படுகிறோம். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வெளிப்படையான முறையில் பணிபுரிந்து வருகின்றனர்." என பேசியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?