தேர்தல் வாக்குறுதிகளை 100% யாராக இருந்தாலும் நிறைவேற்ற முடியாது... திருமாவளவன்!

 
பாஜகவிற்கு தோல்வி பயம்! தொல்.திருமா அனல் பறக்கும் குற்றச்சாட்டு!
 


 

விசிக தலை​வர் திரு​மாவளவன்  “ விசிக​வில் தேர்​தல் பணி என்​பது எங்களது களப்​பணி​களில் ஒன்​று. அதுவே எங்​களது முதன்​மை​யான பணி அல்ல. தேர்​தல் நெருங்கி வரும் சூழலில், தேர்​தல் பணி​களை தீவிரப்​படுத்​து​வோம். தற்​போது கட்​சி​யின் மறுசீரமைப்​புக்​கான பணி​களில் கவனம் செலுத்​தப்​பட்டு வரு​கிறது. திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் மார்க்​சிஸ்ட், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இருக்​கின்​றன. இந்த கூட்​டணி மிக​வும் கட்​டுக்​கோப்​பாக, உறு​தி​யுடன் இருக்​கிறது. இக்​கூட்டணி கட்​டுக்​கோப்​பாகவே தேர்​தலை சந்​தித்து வெற்​றி​பெறும்.

அதிமுக - பாஜக ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறுவது  ஒரு வகையான பில்டப் மட்டுமே...  திருமா விளாசல்!

தேர்​தலின் போது அளிக்​கப்​படும் வாக்​குறு​தி​களை யாராக இருந்​தா​லும் 100-க்கு நூறு சதவீதம் நிறைவேற்ற முடி​யாது. திமுக ஆட்​சி​யில் பெரும்பான்​மை​யான வாக்​குறு​தி​கள் நிறைவேற்​றப்​பட்​டிருக்​கின்​றன. இது அனை​வரும் அறிந்த உண்​மை. ஆனாலும் சில முக்​கிய​மான கோரிக்கைகள் நிறைவேற்​றப்பட வேண்​டும் என்​பது தவிர்க்க முடி​யாதது. மறுக்க முடி​யாதது. அந்​தவகை​யில் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று விசிக சார்​பில் முதல்​வருக்கு சுட்​டிக்​காட்டியிருக்​கிறோம். தேர்​தலுக்கு முன்​பாக அதை நிறைவேற்​று​வார்​கள் என நம்​பு​கிறேன் எனக் கூறியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?