தேர்தல் முடிவுகள்.. முக்கிய வேலை பார்த்த ஷாருக்கான்.. குஷியில் ரசிகர்கள்!

 
ஷாருக்கான்

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முற்றிலும் எதிராக தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், இந்தியக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு நடிகர் ஷாருக்கான் தான் காரணம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஷாருக்கான் எந்தக் கட்சியுடனும் எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர். ஆனால், ஜவான் படத்தின் க்ளைமாக்ஸில் சரியான நபருக்கு வாக்களியுங்கள் என்ற அவரது வரிகள் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருத்துகள் வெளியாகி வருகின்றன. “பயம், பணம், ஜாதி, மதம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் வாக்களிக்காமல், உங்கள் வாக்காளர்களிடம் கேள்விகளைக் கேளுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் உங்களுக்காக என்ன செய்வார்கள் என்று கேளுங்கள். உங்கள் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்கள் எப்படி சிகிச்சைக்கு உதவுவார்கள்? இந்த வசனம் ஜவான் படத்தில் இடம்பெறும்.

ஜவான்

ஜவான் திரைப்படத்தில் இருந்து ஷாருக்கான் பேசும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஒரு பயனர், "2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கு முன், இந்த சிறந்த திரைப்படமான ஜவானுக்காக அனைத்து இந்திய அரசியல்வாதிகளும் ஷாருக்கானுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்று கூறினார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web