தேர்தல் ட்விஸ்ட்.. சந்திரபாபு நாயுடுவுக்கு போன் போட்ட டிகே.சிவக்குமார்!

 
டி.கே.சிவக்குமார்

லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஒரு கட்சி 274 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். ஆனால் இம்முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவு வந்துள்ளது.  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக கூட்டணி 350 முதல் 400 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது. ஆனால் தேர்தல் முடிவு வேறு விதமாக உள்ளது. தற்போதைய சூழலில் பாஜக 235 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கட்சிகளை சேர்த்தால், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மோடி - ராகுல்காந்தி

 மாறாக, 'இந்தியா' கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி காங்கிரஸ் 98 இடங்களிலும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 31 இடங்களிலும், திமுக 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேபோல், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 33 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இது தவிர மற்ற கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால், 232 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணி முன்னிலையில் உள்ளது.  இதனால், தற்போதைய சூழலில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. இதனால், பா.ஜ., 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள், எதிரணி கூட்டணியில் இருந்து ஆட்களை இழுக்கும் பணியை துவக்கியுள்ளனர். இந்த நிலையில்தான் சந்திரபாபு நாயுடு கிங்மேக்கராக வர வாய்ப்புள்ளது.

 அதாவது ஆந்திராவை மையமாக வைத்து அரசியல் செய்கிறார் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒன்றாக நடந்தன. இதில் சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 16-ல் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணியில் உள்ள நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா 2 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் சந்திரபாபு நாயுடுவின் உதவியை பாஜக பெறப்போகிறது. இந்நிலையில், கர்நாடக துணை முதல்வரும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார், சந்திரபாபு நாயுடுவிடம் தொலைபேசியில் பேசினார். பின்னர் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ‘இந்தியா’ கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், மத்தியில் ஆளும் கட்சியாக 'இந்தியா' கூட்டணி பதவியேற்றதும், மத்திய அமைச்சரவையில் முக்கியப் பதவிகளை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. 'இந்தியா' கூட்டணியின் மிக மூத்த தலைவரான சரத் பவார், சந்திரபாபு நாயுடுவிடம் பேசி, 'இந்தியா' கூட்டணிக்கு அழைத்ததாக, முன்னதாக தகவல் வெளியானது. இப்போது டி.கே.சிவக்குமார் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இருப்பாரா, இல்லையா ‘இந்தியா’ கூட்டணிக்கு தப்பித்து விடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web