தமிழகம் முழுவதும் விரைவில் கூட்டுறவு சங்கங்களில் தேர்தல்!

 
கூட்டுறவு


 தமிழகத்தில் விரைவில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23419 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், துணைத்தலைவர் , உறுப்பினர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். கடைசியாக 2018ல் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.  தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.  அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டாக இருந்தது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டாக குறைத்து சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டு பதவியில் நீடித்து வந்தனர்.

கூட்டுறவு


கூட்டுறவு சங்கத்தில்  பெரும்பாலானவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. இதற்காக கூட்டுறவு சங்கங்களின் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் உயிரிழந்தவர்களின்  பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  
இதற்காக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பலரும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தனர். ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் இருந்து தற்போது நீக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் சுமார் 63 லட்சம் பேர்களின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கூட்டுறவு


இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரி செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில் ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டு தற்போது வரை மொத்தம் 1 கோடியே 90 லட்சத்து 26 ஆயிரத்து 152 பேர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 63 லட்சத்து 22 ஆயிரத்து 288 பேர் தகுதியற்றவர்கள் மற்றும் முறைகேடாக சேர்க்கப்பட்டவர்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த ஆதார் கார்டு, ரேஷன் அட்டை கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.  அதன் அடிப்படையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.” அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web