மின்சார ரயில் புறப்படும் நேரம் மாற்றம்... பயணிகளே குறிச்சிக்கோங்க!

 
மின்சார ரயில்

 பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் செயல்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  சென்னை சென்ட்டிரலில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி வழியாக சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண்.06741), அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு, காலை 7.10 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும்.

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

அங்கிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 8 மணிக்கு செல்லும். சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு கூடூர் வழியாக நெல்லூர் செல்லும் பயணிகள் ரயில் (06745), அதற்கு மாற்றாக சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, காலை 9.27 மணிக்கு கூடூர் சென்றடையும். அங்கிருந்து நெல்லூருக்கு காலை 10.30 மணிக்கு செல்லும்.

மின்சார ரயில்

சென்னை சென்ட்டிரலில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு, காலை 6.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web