இன்று நள்ளிரவு முதல் மின்சார ரயில் சேவை ரத்து!
சென்னையில் மின்சார ரயில் சேவையை பொறுத்தவரை நாளையும், செப்டம்பர் 7ம் தேதியும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் சென்னை மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான இரவு நேர மின்சார ரயில் சேவை 5,7 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

அதன்படி இன்று இரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. மேலும் 6,8 ஆகிய தேதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

அதே நேரத்தில் திருப்பதி- காட்பாடி இடையிலான மெமு ரயில்கள் இரு மார்க்கத்திலும் 5,7,8,9 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. திருப்பதியிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயிலும் மறு மார்க்கத்தில். காட்பாடியில் இரவு 11.21 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் மெமு பயணிகள் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
