இனி குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் அவசியம்... தமிழக அரசு அறிவிப்பு!

 
நெடுஞ்சாலையில் சூரிய சக்தி மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைத்தது பெல் நிறுவனம்

தமிழகத்தில் புதியதாக நிர்மாணிக்கப்படும் குடியிருப்பு, வணிக மற்றும் கல்வி வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என மாநில அரசு அரசிதழ் மூலம் அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் பகுதியாகவும், வாகன மாசு குறையவும் மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மின்வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய ரூ. 10 இருந்தால் போதும்..! எங்கே தெரியுமா…?

அரசு அறிவிப்பில், 750 சதுர மீட்டரை மீறும் கட்டிடங்கள் மற்றும் எட்டு வீடுகளுக்கு மேலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒவ்வொரு பார்க்கிங் இடத்திலும் சார்ஜிங் பாயின்ட் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 50 வீடுகளைத் தாண்டும் குடியிருப்புகளில் பார்வையாளர்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் சூரிய சக்தி மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைத்தது பெல் நிறுவனம்

அதேபோல், 300 சதுர மீட்டருக்கு மேற்பட்ட எஃப்எஸ்ஐ கொண்ட வணிக வளாகங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மொத்த பார்க்கிங் பரப்பளவில் குறைந்தது 10% பகுதி மின்சார வாகன சார்ஜிங் வசதிக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசிதழ் தெளிவுபடுத்தியுள்ளது.

மின்சார வாகன எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில், இந்த புதிய விதிநெறி மாநிலத்தில் சார்ஜிங் வளங்களை விரைவாக விரிவாக்கும் என அரசு நம்புகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!