அடி தூள்... மின் கட்டணம் குறைப்பு... சிறு குறு நிறுவனங்கள் உற்சாகம்...!!

 
சிறுகுறு நிறுவனங்கள்

தமிழக அரசு  2022 செப்டம்பரில்  மின்கட்டணத்தை மாற்றி உயர்த்தி அமைத்தது.  இதனால், பொதுமக்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. அதே நேரத்தில் சிறுகுறு நிறுவனங்களின்  பீக் அவர் கட்டணமும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனை குறைக்க வேண்டும் என சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

மின் கட்டண உயர்வு

இது குறித்து  அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொழில் பிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில்   உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து  பீக்-அவர்ஸ் கட்டணத்தை தமிழக  அரசு குறைத்து உள்ளது.  அதன்படி சிறு குறு நிறுவனங்கள்  மின் பயன்பாட்டை பொறுத்து 15-ல் இருந்து 25 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின் கட்டணம்

இது குறித்த அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க்கிங் கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைப்பதாகவும் அறிவித்துள்ளார்.  சமீபத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web