அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கு மின் கட்டண சலுகை.. முதல்வர் அதிரடி !!

 
மின் கட்டணம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு , சென்னை  என 4 மாவட்டங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து  2 வது நாளாக  மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. 28 துறைகளை சார்ந்த மாவட்ட அதிகாரிகளும் இந்த கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.  
இந்நிலையில் கள ஆய்வு கூட்டத்தில் முதல்வர்   "கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்
விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்கள் எந்தவித குறைபாடின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைய வேண்டும்.
நாளை முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

சுங்கச்சாவடி


10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.
சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.5 ஆக குறைக்கப்படும்.
 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தினமும் காலை பத்திரிகை படிக்க வேண்டும். தொடர்ந்து ஊடகங்களை பார்த்து வரவேண்டும். 
தினமும் இதனை அப்டேட் செய்து கொண்டு இருந்தால் தான் நம்மை சுற்றி  நம் மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்;

ஸ்டாலின்
நீங்கள் காணும் செய்திகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.
அவ்வாறு தீர்வு காணப்பட்ட செய்திகளை ஊடகத்திற்கு   தெரிவிக்க வேண்டும்.
தினசரி  இதனை உங்களின் காலை பணியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்" எனக்  குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web