இன்று முதல் 3 நாட்களுக்கு தென்மாநிலங்களில் யானைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!
தமிழக வனக்கோட்டங்களில் ஒவ்வொரு வருடமும் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதே போன்று முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில், பருவமழைக்கு முன்பும், பருவ மழைக்கு பின்பான காலங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், தென்மாநிலங்களில் இன்று யானைகளைக் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. இந்த பணி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைப்பெறும்.

தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம், கடம்பூர், கேர்மாளம், ஆசனூர், தாளவாடி, ஜீரகள்ளி, தலைமலை, பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் உள்ள யானைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இன்று தொடங்கியிருக்கும் இந்த கணக்கெடுப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அகத்தியமலை யானைகள் காப்பகத்தில் 37 குழுவினர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதே போன்று வருடத்திற்கு ஒரு முறை தானியங்கி கேமராக்களைப் பயன்படுத்தி புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
