மின்வேலிகளால் பலியாகும் யானைகள்.. மின்வாரியத்தை கடுமையாக எச்சரித்த உயர்நீதிமன்றம்!

 
யானை

ஓசூர், தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் காட்டு யானைகள் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, ​​மின்சார வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்க தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதில் தாமதம் ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

யானை

யானைகள் மின்வேலியை மிதிக்கும் போது, ​​தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் நடைமுறைகள் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

இதையடுத்து, "மின்வேலிகளால் யானைகள் தொடர்ந்து உயிரிழக்கும் பட்சத்தில், மின்சார வாரியத்திற்கு கடும் அபராதம் விதிக்கப்படும்" என உயர்நீதிமன்றம் எச்சரித்தது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web