லிப்ட் அறுந்து விழுந்து கோர விபத்து.. ஒருவர் பலி..15 பேர் படுகாயம்!

 
கோலிஹான் சுரங்கம்

கோலிஹான் சுரங்கம் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ளது. இந்த சுரங்கத்தில் உள்ள லிப்ட் நேற்று இரவு திடீரென அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உட்பட 15 பேர் சிக்கினர். கொல்கத்தாவில் இருந்து விஜிலென்ஸ் குழுவினரை ஏற்றிச் சென்ற லிப்ட் சுரங்கத்திற்குள் சிக்கியதாக கூறப்படுகிறது.

விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்றுவிட்டு மேலே திரும்பியபோது, லிப்டின் கேபிள் திடீரென பழுதாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், லிப்ட் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web