எலான் மஸ்க் மோடிக்கு வாழ்த்து... வைரலாகும் ட்வீட்!

 
மோடி எலான் மஸ்க்

 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.  நாளை ஜூன் 9ம் தேதி மோடி உட்பட புதிய அமைச்சரவை  அமைச்சர்களுடன்  பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை மோடி சமன் செய்கிறார்.

இந்நிலையில் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவில்  "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் எனது நிறுவனங்கள் இன்னும் சிறப்பான பணிகளை செய்யும் காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!