எலான் மஸ்க் திடீர் முடிவு... ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன்…. வைரலாகும் எக்ஸ் பதிவு!

 
எலான் மஸ்க்
 

உலகப் பணக்காரர்களில் ஒருவராக எலான் மஸ்க் அறியப்படுகிறார். இவர் சமீபத்தில் எக்ஸ் வலைதளத்தை வாங்கி அதில் பல அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். அத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் அதன் ஸ்டார்ஷிப் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு விமானமும் முக்கியமான தரவு மற்றும் நிபுணத்துவத்தை கொடுக்கிறது.

இந்நிறுவனம் ஸ்டார்ஷிப்பின் முழு மறுபயன்பாட்டை அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில்  ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்த போது 9 பறவைகளின் கூடுகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.  இந்த செய்திக்கு எலான் மஸ்க் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

 எலான் மஸ்க்

அதன்படி  இந்த கொடூரத்திற்கு பிராயச்சித்தம் தேட ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிடப் போவதில்லை என தன்னுடைய எக்ஸ் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி  வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web