நெகிழ்ச்சியில் வெட்கப்பட்டேன்; சென்னை ரசிகர்கள் அற்புதமானவங்க’ இந்திய வீராங்கனை உருக்கம்!

 
ஸ்ரேயங்கா
 


‘நெகிழ்ச்சியில் நான் ரொம்பவே வெட்கப்பட்டேன்... சென்னை ரசிகர்கள் ரொம்பவே அற்புதமானவங்க’ என்று உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரேயங்கா.தென்னாப்பிரிக்க மகளிா் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், அபாரமாக விளையாடி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிா் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனில் முடிவடையை, கோப்பையை இரு அணிகளும் பகிா்ந்து கொண்டன.


இந்நிலையில், தனக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு குறித்தும், பெரிய ஸ்கிரீனில் தன்னுடைய படம் ஒளிபரப்பட்ட போதெல்லாம் அவர்கள் எழுப்பிய கரகோஷம் குறித்தும்  21 வயதேயான கிரிக்கெ வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்ரேயங்கா பாட்டீல், கடந்த 2023ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதன் பின்னர் மகளிர் ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியில் ஸ்ரேயாங்கா பாட்டீல் இருந்தார். இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். அது முதல் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஸ்ரேயங்கா பாட்டீல் அதிக பிரபலமானார்.

ஸ்ரேயங்கா


இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை ரசிகர்களே, நீங்கள் அற்புதமானவர்கள்! போட்டிக்கு நீங்கள் அளித்த ஆதரவு நாங்கள் எதிர்பாராதது. அவ்வளவு பேர் வந்து போட்டியை கண்டதும் ஆதரவளித்ததும் எங்களுக்கு மிகப் பெரிய விஷயம். நான் பந்து வீச வரும் போதும், பெரிய திரையில் என்னைக் காண்பிக்கும் போதும் நீங்கள் கொடுத்த ஆதரவினால் நான் வெட்கப்பட்டேன். அனைத்து அன்புக்கும் எனது நன்றிகள்!” என்று பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web