விட்றா வண்டியை... மருத்துவமனையின் 4வது மாடி அவசர சிகிச்சைப்பிரிவு வரை ஜீப்பில் சென்று மருத்துவரைக் கைது செய்த போலீசார்.. அதிர்ச்சி வீடியோ!
பாலியல் புகாரில் சிக்கிய மருத்துவ பணியாளர் ஒருவரை கைது செய்ய ஜீப்பை எய்ம்ஸ் மருத்துவமனையின் 4வது மாடியில் இருக்கும் அவசர சிகிச்சைப்பிரிவு வரை ஓட்டிச்சென்ற போலீசாரின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாலியல் புகார் தொடர்பாக நர்சிங் அலுவலர் ஒருவரை கைது செய்ய போலீஸ் வாகனத்தை அவசர சிகிச்சை பிரிவு வரை போலீசார் ஓட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Uttarakhand Police entering AIIMS Rishikesh to arrest a nursing officer accused of molestation. pic.twitter.com/KD94jWBF68
— Cow Momma (@Cow__Momma) May 23, 2024
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி மருத்துவராக பெண் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். இதே மருத்துவமனையில் நர்சிங் அலுவலராக சதீஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். பெண் பயிற்சி மருத்துவர்களை சதீஷ்குமார் கடந்து சில நாட்களாக தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பெண் பயிற்சி மருத்துவர்களைத் தொடர்ந்து தவறான நோக்கத்தோடு சீண்டுவதும், பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதுமாக அவரது சேட்டைத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்றும் வழக்கம் போல் சதீஷ்குமாரின் சேட்டை அதிகரித்த நிலையில், இது தொடர்பாக பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மிட்டல் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் சதீஷ்குமார் பெண் பயிற்சி மருத்துவரிடம் பாலியல் சீண்டல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவரை பணியில் அமர்த்திய நர்சிங் மேற்பார்வையாளர் சினோஜ் என்பவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இருப்பினும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரச்சினை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று சதீஷ்குமாரை உத்தராகண்ட் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ்குமார் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதை அறிந்து கொண்ட போலீசார் அவரை கைது செய்வதற்காக ஜீப்பை மருத்துவமனை கட்டிடத்திற்கு உள்ளேயே ஓட்டிச் சென்று 4வது மாடி வரை சென்றுள்ளனர். அதன் பின்னரும், அங்கிருந்த நோயாளிகளின் படுக்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு, போலீஸ் வாகனத்தை உள்ளே ஓட்டி சென்று சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர்.
சதீஷ்குமாரை கைது செய்து அழைத்துச் செல்லும் போது, ஏராளமான பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் காவலர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது போலீஸார் மருத்துவமனை வளாகத்திற்குள் வாகனத்தை ஓட்டி வரும் காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
