கூடங்குளத்தில் வெளியூர் ஆட்களை பணியமர்த்துவதா? போரட்டத்தில் குதித்த மக்கள்!

 
கூடங்குளம் கான்ட்ராக்ட் அசோசியேஷன்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் மூலம் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 3 மற்றும் 4 அணுஉலைகள் 80 சதவீதம் முடிவடைந்த நிலையில், 5 மற்றும் 6 அணுஉலைகள் 35 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இங்கு, ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை தனியார் ஒப்பந்த நிறுவனம் (எல்என்டி நிறுவனம்) அணு உலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய நேபாளத்தில் இருந்து சுமார் 200 பேரை 2 பேருந்துகளில் அழைத்து வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த "கூடங்குளம் கான்ட்ராக்ட் அசோசியேஷன்" உள்ளூர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேபாளத் தொழிலாளர்களை அழைத்து வந்த பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தி கீழே இறக்கினர்.

தகவல் அறிந்ததும் தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். "படித்த இளைஞர்கள் பலர் நம் ஊரில் வேலையில்லாமல் இருக்கும் போது, ​​அணு உலைகளில் வேலைக்கு அமர்த்த அண்டை நாடான நேபாளத்தில் இருந்து குறைந்த கூலிக்கு ஆட்களை வரவழைப்பது என்ன நியாயம்?" என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், "ஏற்கனவே அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் இங்கு பணிபுரியும் போது, ​​நேபாளத்தில் இருந்து குறைந்த கூலிக்கு ஆட்களை அழைத்து வருவது ஏன்? அவர்களை வெளியேற்றும் வரை யாரையும் வேலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டோம்," என்று அவர்கள் வாதிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் 

From around the web