1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு!

 
மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 30 பில்லியன் அமெரிக்கா டாலர்  முதலீடு செய்ய இருப்பதாகவும்   இதன் மூலம் 1 கோடி இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் என மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனவரி 6ம் தேதி  மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்தியாவில் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப முன்னேற்றம், பொதுவான தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது.  

மைக்ரோசாப்ட்

சத்யா நாதெல்லா இந்தியாவில் AI தொழில்நுட்பம் சார்ந்து  இந்திய மதிப்பில் சுமார் 25,718 கோடி  முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் சுமார் 1 கோடி இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட்

இது குறித்து  மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் AZURE கிளவுட் தொழில்நுட்பத்தை இந்தியாவில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. தற்போது  அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து  இந்தாண்டு இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு AI தொழில்நுட்பம் சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web