5000 பேருக்கு வேலைவாய்ப்பு... டாடா மோட்டார்ஸ் ஆலை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பெருமிதம்!
தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் டாடா மோட்டார்சின் வாகன உற்பத்தி ஆலைக்கு இன்று மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இங்கு அமைய உள்ள இந்த ஆலையில் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிறுவனம் மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். இன்று நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, டாடா நிறுவன மூத்த தலைமை அதிகாரி சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் ” நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று இன்றைக்கு உலகின் தலைசிறந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் சந்திரசேகரனை நினைத்து தமிழ்நாடே பெருமைகொள்கிறது. தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு தான் தலைநகரமாக உள்ளது . ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற சர்வதேச நிறுவனங்களின் வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. டாடா போன்ற உலகளாவிய சர்வதேச சந்தையில் வாகனங்களை விற்பனை செய்யும் உற்பத்தி நிறுவனங்களின் ஆலையும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
உலகின் முக்கிய நிறுவனங்களின் முகவரியாக தமிழ்நாடு திகழ்கிறது. டாடா குழுமத்தைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. பொருளாதாரம் மட்டுமல்ல பெண்களுக்கு உரிமை வழங்குவதிலும் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.” என பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!