ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... பெல் நிறுவனத்தில் 515 காலி பணியிடங்கள்!
ஐடிஐ முடித்தவர்களுக்கு, பெல் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெல் நிறுவனம் என்பது பாரத் ஹெவி எல்க்ட்ரிக்கல்ஸ் எனப்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்நிறுவனம் புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் நிலையில் திருச்சியிலும் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. தற்போது பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 515
பதவி: ஆர்ட்டிசியன்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
ஐ.டி.ஐ. படித்தவர்கள்
வயது:
பொதுப்பிரிவினர் : 27
ஓ.பி.சி. - 30
எஸ்.சி./எஸ்.டி - 32
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: கணிணி தேர்வு, திறனறி தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-8-2025
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.bhel.in/ முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
