அமலாக்கத்துறை அனில் அம்பானிக்கு சம்மன்!
முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. 66 வயதாகும் இவர் 'ராகாஸ்' எனப்படும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் நிறுவனங்களுக்கு, எஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியிருந்தது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் சட்டவிரோதமாக பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில், அனில் அம்பானியை மோசடியாளர் என எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்திருக்கும் நிலையில், அவருக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.இந்த வழக்கு சம்பந்தமாக ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகும்படி அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவானசருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
