தியேட்டரில் நிச்சயதார்த்தம்... லியோ கொண்டாட்டம்... காதலியைக் கரம் பிடித்த விஜய் ரசிகர்!

 
லியோ

தனது காதலியின் கரம் பிடித்து, மோதிரம் மாற்றி, மாலை மாற்றி 'லியோ 'படத்தின் முதல் காட்சியின் போது தியேட்டரில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட விஜய் ரசிகர் புதுக்கோட்டையை அதிர செய்துள்ளார். அவருக்கு லியோ படம் பார்க்க வந்த ரசிகர்கள், தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மாலை மாற்றிக் கொண்டவுடன், இருவரும் ஜோடியாக படம் பார்த்தனர். 

லியோ

தமிழக முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், விஜயின் தீவிர ரசிகரான புதுக்கோட்டை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது காதலியுடன் 'லியோ' படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்துள்ளார்.

படம் தொடங்கியவுடன், அவர் ரசிகர்கள் முன்னிலையில் தனது காதலிக்கு மோதிரம் மாற்றி திருமணத்தை அனைவர் முன்பாக நிச்சயம் செய்து கொண்டார். அப்போது அங்கிருந்த விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்து தம்பதிகளை வாழ்த்தினர்.

லியோ

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், விஜய் ரசிகர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தம் திரையரங்கில் நடைபெற்றுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web