பிரபல நடிகைக்கு நிச்சயதார்த்தம்...வைரல் வீடியோ!!

 
அர்ஜூன்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்  ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்.  இவர் சமீபத்தில் வெளியான  இளையதளபதியின் லியோ படத்தில் நடித்திருந்தார். விஜய்க்கு இணையான வரவேற்பு இவருக்கு திரையரங்குகளில் அளிக்கப்பட்டது. அர்ஜுன் தமிழ் , தெலுங்கு, கன்னடம்  உட்பட பல மொழிகளிலும் தனது நடிப்பாலும் ஆக்‌ஷனாலும் பட்டையை கிளப்பியவர்.  இவர் சேவகன், பிரதாப், ஜெய்ஹிந்த், சுயம்வரம், வேதம், ஏழுமலை என   பல படங்களை இயக்கியவர்.

அதுமட்டுமின்றி கர்ணா, கன்னடத்தில் துட்ட முட்ட ஆகிய படங்களுக்கு திரைக்கதை  எழுதியவர். பன்முகத் திறமையானவரான இவருக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் பிரேம பரஹா, தமிழில் சொல்லிவிடவா ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்தார் ஐஸ்வர்யா. இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். அர்ஜுன் மகளும், தம்பி ராமையாவின் மகனும் காதலிக்கும் விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையே தந்தது. ஏனெனில் இரண்டு பேரும் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இந்நிலையில் இரண்டு பேரின் காதலுக்கும் க்ரீன் சிக்னல் விழுந்ததை அடுத்து நிச்சயதார்த்தம் இன்று நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. 

அர்ஜுன்
அதன்படி சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றனர். தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web