பொறியியல் படிப்புகளில் சேர 4 நாட்களில் 69,953 பேர் விண்ணப்பம்!

 
அண்ணா பல்கலை கழகம்

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே 6ம் தேதி வெளியான நிலையில், அன்றைய தினத்தில் இருந்து பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கு இதுவரை கடந்த 4 நாட்களில் 69,953 போ் விண்ணப்பித்துள்ளனா்.

பொறியியல் கல்லூரி

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் நாளிலேயே 20,000 விண்ணப்பங்கள் குவிந்தன. அதனைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் மாணவ-மாணவிகள் ஆா்வமுடன் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனா். விண்ணப்பப் பதிவு தொடங்கி 4வது நாளான நேற்று வியாழக்கிழமை மாலை வரை 69,953 போ் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனா்.

மாணவிகள்

விண்ணப்பித்தவர்களில் 32,834 போ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனா். 12,584 போ் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 6ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web