பெரும் சோகம்... என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கி பலி!

 
ஷாஜி

 இடுக்கி மாவட்டம் தொடுபுழா  முட்டம் பகுதியில்   தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்த கல்லூரியில் கொல்லத்தில் வசித்து வரும் 22 வயது  ஆக்ஷாரெஜி   மற்றும் அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் இடுக்கி முரிக்காஞ்சேரி பகுதியில் வசித்து வரும் 22 வயது டோனன் ஷாஜி  இருவரும் நண்பர்கள் ஆவர்.

முட்டம்

இந்நிலையில் இருவரும் முட்டம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள தடாகத்தில் அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

முட்டம்

இச்சம்பவம் குறித்து  தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், நீர்வீழ்ச்சி தடாகத்தில் இறங்கி இருவரின் உடல்களையும் மீட்டனர். இதனை பார்த்து சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தடாகத்தில் குளித்தபோது 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது  தெரியவந்தது. இச்சம்பவம்  குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web