பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் திடீர் அறிவிப்பு!

 
அண்ணா பல்கலை கழகம்

 தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் மே 15ம் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த தேர்வுகள் தற்போது  ஜூன் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத்   தேர்தலில் பதிவான வாக்குகள்   ஜூன் 4ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன.

செமஸ்டர்
இந்த அறைகளுக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாக்கப்பட்ட இடங்களில் மாணவர்களோ அல்லது வெளி ஆட்களோ அனுமதி இல்லை.  இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது கடினமாக செயலாக இருக்கலாம் என்பதால்  தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மே 15ம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள்  ஜூன் 6ம் தேதி தொடங்கி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web