பாகிஸ்தான் தோல்வி : டி20 தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றி வென்றுள்ளது.வரும் ஜூன் 2ம் தேதி 20 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை டி20 தொடர் துவங்க உள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் உலக கோப்பைப் போட்டிகளுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. 3வது போட்டியும் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இறுதி மற்றும் 4வது போட்டி நேற்று இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே குவித்தது.

அடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
