ஜூன் 12 வரை பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை... கால அவகாசம் நீட்டிப்பு!

 
தமிழில் பொறியியல் படிப்புக்கள்?!

 தமிழகம் முழுவதும்  440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் நடத்தப்பட்டு  வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புக்களில் சேர  2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இந்த இடங்கள் அனைத்தும்  பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான   அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு  மே 6ம் தேதி தொடங்கியது.

பொறியியல் கல்லூரி
இதற்கான காலஅவகாசம் ஜூன் 6ம் தேதியுடன்  முடிவடைந்த நிலையில்  2,48,848 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.  விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு அரிய வாய்ப்பாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூன் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜுன் 6ம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அதில் ஏற்கனவே 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.  இன்னும்  1 லட்சத்து 76 ஆயிரத்து 145 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துவிட்டதாக  தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
 கலந்தாய்வு
ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில்,  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதி  ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் மாணவர்களுக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும்.   ஜூன் 13 முதல் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு  ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பிறகு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web